Post அப்துல்கலாம் பொன்மொழிகள் – apj abdul kalam quotes in tamil Manavarpakkam June 1, 2021 No Comments அழகை பற்றி கனவு காணாதீர்கள் அது உங்களின் கடமையை பாழாக்கி விடும். கடமையை பற்றி கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும். வாய்ப்புக்காக காத்திருக்காதே…உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்தி கொள்…. கனவு காணுங்கள் ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல உன்னை தூங்க விடாமல் பண்ணுவது எதுவோ அதுவே கனவு. நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும் உன் உழைப்பால் நீ எண்ணியது உன்னை வந்து சேரும்.நீ நீயாக இரு. நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதும் மண்டியிடுவது இல்லை. இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது. நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்… ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்…!