முடி கொட்டுதல் பிரச்சனையா இத டிரை பண்ணுங்க…

பெண்ணுக்கும், ஆணுக்கும் முடிகொட்டும் பிரச்சினை என்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. அதிலும் ஆண்களுக்கு முடி கொட்டி வழுக்கை வந்துவிட்டால் தன்னம்பிக்கை இழந்து அதனால் மிகவும் வறுத்த படுகிறார்கள். தற்சமயம் சிறு வயதினருக்கு கூட முடி கொட்டும் பிரச்சினை ஏற்படுகிறது.

எந்த பிரச்சினையாக இருந்தாலும் சமாளிக்க முடியும். ஆனால் தலை முடி உதிர்வதை தடுப்பதும், அதனால் தலையில் வழுக்கை ஏற்படுவதையும் நம்மால் சமாளிக்கவே முடியாது.

அவ்வாறு முடி உதிர்ந்து வழுக்கை ஏற்பட்ட அந்த இடத்தில் எவ்வாறு மீண்டும் முடி வளர வைப்பது என்பது பற்றி பார்க்கலாம் வாங்க.

வெங்காயம் ஹேர் பேக்

சின்ன வெங்காயத்தை நன்றாக அரைத்து பேஸ்டாக்கிக் கொள்ளுங்கள். பின்னர் அந்த பேஸ்டை உங்கள் தலையில் நன்கு மசாஜ் செய்து தலையில் நன்கு படும் படி ஊற வைக்க வேண்டும். அரைமணிநேரம் கழித்து ஷாம்பூ போட்டு தலையை அலசுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் முடி உதிர்ந்து வழுக்கை ஏற்பட்ட இடத்தில் மீண்டும் முடி வளர வாய்ப்புள்ளது.

ஆலிவ் ஆயில் மசாஜ்

ஆலிவ் ஆயில் நிறைய மருத்துவ குணங்களைக் கொண்டது. இதனைத் தொடர்ந்து தலையில் தேய்த்து வர, நல்ல முன்னேற்றம் இருக்கும்.

ஆலிவ் ஆயில்- 1 டேபிள் ஸ்பூன்

தேன்- 1 டேபிள் ஸ்பூன்

பட்டை பொடி- 1 டேபிள் ஸ்பூன்

இதை நன்றாக கலந்து லேசாக சூடாக்கி கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை தலையில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் விட்டு விட வேண்டும். பிறகு மைல்டு சாம்பு கொண்டு தலைமுடியை அலசி விடுங்கள்.

முட்டை ஹேர்மாஸ்க்:

முட்டையின் மஞ்சள் கருவில் ரத்த மருத்துவ குணங்கள் உள்ளது. ஒரு முட்டையை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் உள்ள மஞ்சள் கரு மற்றும் வெள்ளைக் கருவை தனித்தனியாக பிரித்துக்கொள்ளுங்கள். பின்னர் மஞ்சள் கருவில் ஒரு டீ ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் கொஞ்சம் லெமன் ஜூஸ் சேர்த்து நன்கு கலக்கி கொள்ள வேண்டும்.

இதனை தலையில் தேய்த்து மசாஜ் செய்து செய்து பின்னர் தலைக்கு குளித்து விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமும் வழுக்கை விழுந்த இடத்தில் மீண்டும் முடி வளர வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *